• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகர் கமலுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.., செல்லூர்ராஜூ விமர்சனம்..!

Byவிஷா

Feb 20, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில், நடிகர் கமல்ஹாசனுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து இவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில்  இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் கூட்டணி கட்சியினரிடம் நேரடியாக சென்று ஆதரவு கேட்டதுடன், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தும் ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார். இதற்கு கமல்ஹாசனும் ஆதரவு அளிப்பதாகவும், பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, காங்கிரஸ் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். கமல்ஹாசன் வருகையால், ஈரோடு மக்கள் திரண்டனர். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
அதாவது, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனை பார்க்க தான் கூட்டம் கூடியது, அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இடைதேர்தலால் பெரிய மாற்றம் வரப்போகிறதா? கமல் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மக்களை அடைத்து வைத்து திமுக அமைச்சர்கள் பணம் கொடுக்கின்றனர் என குற்றசாட்டியிருந்தார்.