• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

Byஜெ.துரை

Mar 30, 2024

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சித்தி எனும் தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், 2003 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுகு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது திருவான்மையூரில் வசித்து வந்தார் இந் நிலையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொட்டிவாக்கம் Poomed மருத்துவமனையில் டேனியல் பாலாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அமீர், வெற்றிமாறன், சந்தோஷ் நாராயணன், கவுதம் மேனன் மற்றும் நண்பர்கள் மருத்துவமனையில் உடன் இருந்தனர். சென்னை ஆவடியில் ஶ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றையும் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.