• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காயம்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை, நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆர்வலர்கள்

ByKalamegam Viswanathan

Feb 17, 2024

மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட திருநகர் அருகில் ஜோசப் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வேலியில் சிக்கி வயிற்று பகுதியில் காயமடைந்த பாம்பை வீட்டின் உரிமையாளர் வாசுதேவன் என்பவர் மீட்டு பாம்புபிடி வீரர் ஆர்வலர் சகா என்பவரின் உதவியுடன் வேலியில் சிக்கிய 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தை மதுரை பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து (12 தையல் போட்டு) பின்னர் பத்திரமாக அடர்வணப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. தொடர்ந்து காயமுற்ற பாம்பை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.