
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுவையில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் புதிதாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் மறைமுகமாக மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர். இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடை ஆனதால் அவதிக்குள்ளான பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடம் நடத்தினர். இந்த நிலையில் புதுச்சேரில் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புதுவை மின்துறை சான்றிதழ் பெற்றோர் நலசங்கம் மற்றும் மின்துறை ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக்கூடாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

- வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை… Read more: இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…
- இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர… Read more: இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…
- மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது… Read more: மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக… Read more: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…
- பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…“சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில்… Read more: பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…
- ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269… Read more: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!
- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு… Read more: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!
- குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட கேரளாவில் பதுங்கி இருந்த மூவர்… Read more: குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…
- மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடுவதற்கும் மற்றும்… Read more: மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,
- அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…
- ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது.… Read more: ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…
- மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்… Read more: மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…
- சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…சர்பாசி சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் RBL வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோவை… Read more: சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…
- புகைப்படக் கண்காட்சி:மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும்… Read more: புகைப்படக் கண்காட்சி:
