• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

Byகாயத்ரி

Jan 28, 2022

தமிழ்நாட்டில் ஓடும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் மற்றொரு சூப்பர் உத்தரவை மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது அமல் படுத்தியுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்களை அன்புடன் உபசரித்து நடக்க வேண்டும். கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.