• Mon. Jan 20th, 2025

திரண்ட கருமேகங்கள்: விருதுநகரை குளிர்வித்த மழை

ByBala

Apr 13, 2024

விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைந்து வந்தது. இந்நிலையில்
தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (7மணி வரை) விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர், சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கன மழையாக பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சிவகாசியில் 7 செ.மீட்டரும், வேம்பக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர் AWS, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதியில் 4 செ.மீட்டரும், சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதியில் 3 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 2 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.