விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது.
விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியை பாஜக நிர்வாகி பிடித்து தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரிடம் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனை தொடர்ந்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மற்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.ஆர்.ஓ. மகேஸ்வரி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், பாஜக காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.