• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!

ByBala

Apr 13, 2024

அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமரிடம் மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த காரில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதன்படி அருப்புக்கோட்டை நகர் பகுதியில் காந்தி மைதானம், திருநகரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விவிஆர் காலனி, கலைஞர் நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.‌

இதனைதொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார், என்னுடைய கணவர் அடிக்கடி கூறுவார், அருப்புக்கோட்டையில் தறியும், திரியும் தான் பிரதான தொழில் என்று,
இங்கு நான் வெற்றி பெற்றால் இங்கு வரவுள்ள ஜவுளி பூங்காவை விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

அப்போது தங்கம் விலை கூடிக்கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர், தங்கம் வந்து யார் கையிலும் கிடையாது அது உலகத்தில் உள்ள யாரோ ஒருவர் கையில் உள்ளது.‌ அதேபோல தண்ணீர் பிரச்சனை அனைத்து பகுதிகளிலும் உள்ளது.‌ இது குறித்து கேட்டால் எம்எல்ஏ வேறு வேலை இருக்கிறது என கூறுகிறார்.

மேலும் அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி முதலில் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என குரல் எழுப்பினர்.

உங்கள் மருத்துவருக்கு மருத்துவம் தெரியுமா என உங்களுக்கு தெரியுமா.
நீங்கள் உயிரை காப்பாற்றி விட்டார் என கூறுகிறீர்களே, அவர் உண்மையான மருத்துவர் தனா என உங்களுக்கு தெரியுமா.‌ மருத்துவம் என்பது உயிரை காப்பாற்றக் கூடிய ஒரு தொழில். சாட்டர்ட அக்கவுண்ட் ஆடிட்டர் என்பது நீங்கள் ஒரு முறை தான் தேர்வு எழுத முடியும்.‌ ஆனால் நீட் என்பது நீட் என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.‌ எத்தனை பேர் காசு கொடுத்து டாக்டராகிறார்கள் என தெரியுமா அதை தடுப்பதற்கு தான் நீட் தேர்வு என பேசினார்.