• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோ

ByKalamegam Viswanathan

Mar 24, 2023

மதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் வெளியீடு பரபரப்பு
மதுரை வசந்தன் நகர் பகுதியில் உள்ள வசந்தரா அப்பார்ட்மென்ட்ஸ் சேர்ந்த பாஸ்கரன் மகன் ராஜ்குமார் இரவு 7/45 வீட்டிலிருந்து மாடக்குளம் பகுதியில் உள்ள செட்டில் விளையாடுவதற்காக(TN- 58/AH 8136) என்னுள்ள வீட்டிலிருந்து
தனது இருசக்கர வாகனத்தில்வந்து கொண்டிருந்தார்.நேரு பை-பாஸ் ரோடு, நேரு நகர் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த போது சாலையில் சென்ற காசி மகன் தயாளன் 8 வயது சிறுவன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயம் அடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.விபத்து ஏற்படுத்திய ராஜ்குமார் மீது திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து மோதும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நெஞ்சை பதற வைத்தது.இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.