• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு

ByA.Tamilselvan

Feb 8, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மனுவும் ஏற்கபட்டது. ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் மனு நிராகரிக்கப்பட்டது.