• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுபோதையில் அட்டூழியம்.. 17வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் தங்க நகை ஆசாரியாக உள்ளார்.இவருக்கு திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் பிளஸ்-2 பயின்று வருகிறார்.

பிரவீன் மனைவிக்கு தைராய்டு பிரச்சனை இருந்த காரணத்தினால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், தினசரி இரவு நேரத்தில் இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ,இரவு நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு மதுபோதையில் வீட்டிற்கு வரும் பிரவீன் பெற்ற மகள் என்று கூட பாராமல் தனது 17 வயது மகளுக்கு கடந்த 6 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தந்தையின் தொல்லை அத்துமீறி போகவே இது குறித்து மாணவி தனது தாயிடம் தந்தையின் அத்துமீறல் குறித்து தெரிவித்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்து புகாரின் பேரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.