


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் காடனேரி கிராமத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் , இளம்பெண்கள், என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,

அதிமுகவில் இளைஞர்கள் இளம் பெண்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
அதிமுகவை நம்பி கெட்டவர்கள் யாரும் கிடையாது. மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அம்மையார் தலைமையில் கட்சியில் இணைந்த இளைஞர்கள், இளம் பெண்கள், எதிர்காலம் சிறப்பாக இருந்தது போன்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி யார் தலைமையில் அதிமுகவில் இளைஞர்கள் இளம்பெண்கள் இணைந்து வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு துணையாக நிற்போம். அவர்கள் வாழ்க்கை பொற்காலமாக மாறும்
கிராமங்களின் அடிப்படைதேவைகள் நிறைவேற்றுவதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர், விருதுநகர் மாவட்ட (மே) பூத்கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.மான்ராஜ் , ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா, இளைஞர் பாசறை முத்துராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

