• Fri. Apr 18th, 2025

அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்-வணிகர்சங்க பேரவையினர் கோரிக்கை

Byp Kumar

Dec 11, 2022

டெஸ்ட் பேக்கேஜ் என்ற பெயரில் கடைகளில் அபராதம் விதிக்கும் வணிகவரித்துறையினரின் நடவடிக்கையை கைவிட கோரி வணிகர்சங்க பேரவையினர் கோரிக்கை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் ஜெயக்குமார் ஸ்வீட்ராஜன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகள்பொறுப்பேற்கும் நிகழ்ச்சியும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விழாவிற்க்கான ஏற்பாட்டினை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.
பினனர் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது டெஸ்ட் பேக்கேஜ் நடைமுறையால் வணிகர்கள் பாதிப்புக்குள்ளாவதால் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் எனவும் இந்நிலை தொடர்ந்தால் வியாபாரிகளை ஒன்றுதிரட்டி சென்னையில் மிகப்பெரிய போராட்டம்நடத்தப்படும் என கூறினார்