• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அப்பாடி குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..

Byகாயத்ரி

Feb 2, 2022

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 91 ரூபாயை எண்ணெய் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேவேளை, வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.