பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குர்பிரீத் கோகி சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்பிரீத் கோகி. இவர்
ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா தொகுதியின் எம்எல்ஏ. இவருடைய அறையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவரை மர்ம நபர்கள் சிலர் சுட்டு கொலை செய்த நிலையில் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




