அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி பாரிசில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அதன்பின்னர், 4 மாதங்களுக்குப்பின் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.