• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்…

ByKalamegam Viswanathan

Sep 12, 2023

ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும். புதிதாக ஆதார் அட்டை பெறும் போது அதில் சில தகல்வல்கள் (கைப்பேசிஎண், முகவரி, புகைப்படம், விழித்திரை) மாற்றம் தேவைப்படுகிறது. இதற்காக திருவரங்கம் அஞ்சல் துறைவழியாக ஆதார் திருத்த முகாம் இன்று (11.09.23) முதல் ஒரு வாரம் நடைபெறுகிறது. புலிவலம் தபால் உதவியாளர் R.K. கார்த்திக்மற்றும் புத்தனாம்பட்டி தபால்காரர் K.மௌனிதா ஆகியோர் இணைய வழியாக ஆதாரில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாம் மூலம்இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்தனர். முன்னதாக இந்த முகமை கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.