• Tue. Mar 25th, 2025

கேரளாவின் சிறுவன் கார் ஏற்றி கொலை… குழித்துறையில்குற்றவாளி கைது…,

கேரளம் பகுதியில் பொது இடத்தில் வாகனம் ஓட்டிவந்த ஒருவர் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டி, அந்த சிறுவன் சாலையில் நடந்து சென்ற போது சிறுவன் மீது வேண்டும் என்றே வாகனத்தை வேகமாக ஓட்டிய பிரியரஞ்சன் திட்டமிட்டே சிறுவன் மீது வாகனத்தை ஏற்றி விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் சிறுவன் சாலை ஓரத்தில் உயிர் அற்ற நிலையில் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவிக்க காவல் துறை சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை அடையாளம் கண்டு தேடுதலில் ஈடுபட்டனர். சிறுவன் மீது கார் ஏற்றி கொலை செய்துவிட்டு,வாகனத்துடன் தப்பிய குற்றவாளி பிரியரஞ்சனை கேரளா காவல்துறை தமிழக (குமரி மாவட்டம்) குழித்துறை பகுதியில் வைத்து கைது செய்தனர். சிறுவன் மீது கார் ஏற்றிவிட்டு தப்பித்தது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. காவல்துறை சம்பந்தப்பட்ட குற்றவாளி தம்பி அடுத்த மாநிலத்திற்கு சென்றாலும் கைது செய்ய உதவியது.