பெண் குரலில் பேசி ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒரு போலி சமூக வலைதள கணக்கு மூலம் பாலியல் தொழில் சம்பந்தமான தகவல்களைப் பரப்பி, ஆண்களிடம் பணம் பறிப்பதாக புகார் அளித்தார். இதனையடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலியான கணக்கு மூலம் பண மோசடி செய்யும் நபரை கண்டறிய, சைபர் கிரைம் போலீசார் அதில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணைக் கண்காணித்தனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நெட்வொர்க் மூலம் கிருஷ்ணன் என்ற இளைஞரை கைது செய்தனர். கிருஷ்ணன் பல்வேறு போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆபாசமாக பேசி ஆண்களிடம் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது
