திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் வயது(28). இவர் வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.
இன்று இவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனக்கு செகண்ட் ஹேண்ட் செல்போன் தேவை என்று கூறி 6000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை வாங்குவதற்காக பார்த்துள்ளார்.

அப்போது தன்னிடம் 4000 ரூபாய் மட்டுமே உள்ளது, மீதி 2000 ரூபாபை தனது நண்பர் கொண்டு வருகிறார் என்று சொல்லிவிட்டு கடையில் நின்று செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அசாருதீன் மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்து கொண்டிருந்த போது, செல்போனை திருடிக்கொண்டு அந்த வாலிபர் ஏற்கனவே ஸ்டார்ட் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அசாருதீன் இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வேடசந்தூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனை திருடி கொண்டு வாலிபர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.