• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் அருவியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!!

ByS.Ariyanayagam

Oct 19, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருவியில் சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் – கலா தம்பதியினரின் மகன் நந்தகுமார்(21) என்பவர் நீரில் மூழ்கி பலியானார்.
தீயணைப்புத்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வேளையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதால் இன்று காலை மீண்டும் உடலை தேடும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர்.