• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆடு திருடிய வாலிபர்,இளம்பெண் கைது..,

ByRadhakrishnan Thangaraj

Apr 30, 2025

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் போலீஸ் சரகம் வலையபட்டி தெற்கு தெருவில் வசிப்பவர் பொன்னுச்சாமி வயது 60 விவசாயி இவர் தனது வீடு அருகே ஒரு தொழுவம் அமைத்து அங்கு ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 17ஆம் தேதி இரவு பொன்னுச்சாமி ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்று உறங்கி விட்டு மறுநாள் காலை தொழுவத்தை திறந்து பார்த்தபோது அதிலிருந்து பத்து மாத வயதுடைய ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாடு ஒன்று மாயமானது தெரியவந்தது.

இது குறித்து அவர் தந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடிய சேத்தூர் எம்பிசி காலனியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி வீரக்குமார் வயது 26 இவருடன் பணியாற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் செக்கடி தெருவை சேர்ந்த கற்பகம் வயது 20 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து திருடு போன ஆட்டை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.