ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனை. ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனைக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை போரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது…, அழகு துறையில் பெண்களுக்கான நலவாரிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இலவசமாக 500 பேருக்கு உறுப்பினர் அட்டை மற்றும் கலைஞர் காப்பீடு வழங்குகிறோம்.
இரண்டாயிரம் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு இலவச பரிசோதனை செய்வதோடு விழிப்புணர்வு பேரணியும் நடத்துகின்றோம்.
அழகு கலை துறையில் இருக்கும் அனைவரையும் வரவேற்கும் விதமான இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் அமைச்சர்கள் முன்னணி கலைஞர்கள் திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
முடிக்கு பூசப்படும் சாயத்தால் புற்றுநோய் உண்டாவது இல்லை விளம்பரத்தை பார்த்து மக்கள் வாங்கி உபயோகப்படுத்துவதை நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. இருப்பினும் நாங்கள் அமோனியா இல்லாத பொருட்களைதான் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்துகின்றோம். மேலும் வாடிக்கையாளரிடம் ஆலோசனை கொடுத்த பின்புதான் சேவை வழங்குகின்றோம்.
நீதிமன்றமே ஸ்பா நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனவே ஸ்பா நடத்துகின்றவர்கள்
முறையான உரிமங்கள் பெற்று இருந்தால் பிரச்சனை ஏதுமில்லை எனவே பியூட்டி பார்லருக்கும் மசாஜ் சென்டருக்கும் வித்தியாசம் உள்ளது. அதற்குண்டான உரிமங்கள் வாங்கி நடத்தினால் பிரச்சினைகள் ஏதும் கிடையாது. எனவே எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தவறாக நடப்பதில்லை.
வெளிநாட்டவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு என்று இல்லை நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதற்கான பயிற்சிகள் வழங்கி வருகின்றோம் என தெரிவித்தனர்.