• Thu. Mar 28th, 2024

மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளன
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் வரும் நான்காம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அகில இந்திய அளவில் பெண்களுக்கான இந்த கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா தெலுங்கானா மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்க உள்ளதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைத்தலைவர் எஸ் ஆர் பார்த்திபன் தெரிவித்தார். இந்த போட்டியினை தமிழக நடராஜ் நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திமுக விளையாட்டு மேம்பாட்டு செயலாளர் எம் பி தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்
போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளது.மேலும் விளையாட்டை காண வரும் பார்வையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *