திமுக, அதிமுக கட்சியினர் திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது.
காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை செய்து திமுக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம்.

சென்னை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் திமுக இந்தி எதிர்ப்பு தொடர்பாக சுவர் விளம்பரம் செய்துள்ளனர். அதற்கு முன்னதாக அதிமுக சுவர் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதனால் அதிமுகவினர் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் தொடர்பான பேனரை நீளமான சுவரில் திமுக சுவர் விளம்பரத்தை மறைத்து ஒட்டி விட்டனர்.
இந்த தகவலறிந்த திமுகவினர் பேனரை கிழிக்க வந்ததால் அதிமுகவினர் ஒன்று கூடினர்.
அதிமுக, திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. பல்லாவரம் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு கட்சியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுகவின் சுவர் விளம்பரத்தை வர்ணம் பூசி அழித்து விட்டு அதன் மேல் அதிமுக பேனர் ஒட்டிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து திமுக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டு அதிமுக பேனர் ஒட்டப்பட்டது.

இதற்கு திமுக பெண் நிர்வாகி ஒருவர் கோபமடைந்து எப்படி திமுக சுவர் விளம்பரத்தை அழிப்பீர்கள் என வாக்குவாதம் செய்தார் அவரை கட்சியினர் சமாதனம் செய்தனர்.
இந்த சுவர் விளம்பரத்தால் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் போலீஸார் போடப்பட்டுள்ளனர்.