• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

Byகுமார்

Aug 24, 2022

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டி நேபால் பொக்கரா என்னும் இடத்தில் நடைபெற்றது .இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்த ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆசான்கள் முத்துநாயகம் இன்பவள்ளி தலைமையில் 7 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.சப் ஜீனியர், ஜீனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, ஒற்றைச்சுருள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சில் கலந்துகொண்ட 7 வீரர் வீராங்கனைகளும் தங்கப்பதக்கம் வென்றனர்.
நா.சோணை 17 வயது பிரிவில் ஒற்றை சுருள்ளில் தங்கம் பதக்கம் வென்றார். மு. பிரக்திஷ் 10 வயது பிரிவில் ஒற்றை சுருள்ளில் தங்கம் பதக்கம் வென்றார்.மு.ககன் 10 வயது பிரிவில் இரட்டை கம்பில் தங்கம் பதக்கம் வென்றார்.
மாணவியர்கள் ஆ.கனிஷ்கா 12 வயது பிரிவில் இரட்டை வாளில் தங்கம் பதக்கம் வென்றார்.சு.ரேஷ்மா 12 வயது பிரிவில் ஒற்றை வாளில் தங்கம் பதக்கம் வென்றார்.ச.காவியா 17 வயது பிரிவில் இரட்டை சுருளில் தங்கம் பதக்கம் வென்றார்.
பூ.பிரீத்திகா 17வயது பிரிவில் இரட்டை வாளில் தங்கம் பதக்கம் வென்றார்.இந்நிலையில், சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்துடன் திரும்பிய சிலம்பாட்ட வீரர்கள் வீராங்கனைகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் தமிழ்நாட்டிற்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தாய் மண்ணிற்கு திரும்பினர்.அவர்களை வரவேற்று மதுரை தொடர்வண்டி நிலையத்தில் மாடக்குளம் AXN சிலம்பம் அகாடமி ஆசான்.சோ. மணிகண்டன் வாழ்த்தி வரவேற்று மலர் மாலை, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.