• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பிறந்து 15 நாட்களே ஆன நல்ல பாம்பு குட்டி படமெடுத்து ஆடிய வீடியோ காட்சி.., சமூக வலைதளத்தில் வேகமாக பரவல்…

ByKalamegam Viswanathan

Sep 27, 2023

மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் குட்டி நல்ல பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரரான சிவா பாண்டிக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் குட்டி நல்ல பாம்பை பிடிக்க முற்பட்ட பொழுது, அந்த பாம்புபிடி கருவியுடன் அந்த குட்டி நல்ல பாம்பு சண்டையிட்டு வேகமாக ஓடியது.

தொடர்ந்து அதனை மடக்கிப்பிடித்த பாம்புபிடி வீரர் வனப்பகுதியில் சென்று விட்டார். இந்த நல்ல பாம்பு பிறந்து 15 முதல் 20 நாட்களான சிறிய நல்ல பாம்பு என தெரிவித்தார்.