• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதியதில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் பலி

ByKalamegam Viswanathan

Jul 12, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, கணபதிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உத்தமநாதன் (வயது 32) இவரது மனைவி பூர்ணம் (வயது 28) உத்தமநாதன் விறகு வியாபாரம் செய்து வருகிறார். உத்தமநாதன் தனது மனைவி மற்றும் மகன் வீரசத்தி (வயது 2 1/2)இன்று மாலை தனது குடும்பத்தாருடன் இருசக்கர வாகனத்தில் கணபதி நகர் பகுதியில் இருந்து தெற்கு வாசல் நோக்கி செல்லும் போது வில்லாபுரம் இந்தியன் வங்கியின் அருகில் பின்னால் வந்த பள்ளி வாகனம் மோதியதில் உத்தமநாதன் நிலைதடுமாறி குடும்பத்துடன் கீழே விழுந்தார்.

இதில் பூரணம் மடியில் இருந்த குழந்தை வீரசக்தி பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்த குழந்தை வீர சக்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பள்ளி வாகனம் மோதி குழந்தை வீரசக்தி இறந்ததனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.