• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சூறைக் காற்றில் வேருடன் சாய்ந்த மரம்..,

BySeenu

Jul 16, 2025

ஆடி மாதம் நாளை பிறப்பதற்கு முன்பே கோவை மாவட்டம் முழுவதும் முழுவதும் கடந்த 10 நாட்களாக அடித்து வீசும் சூறைக் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாயத் தொடங்கின. மேலும் சில பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

இந்நிலையில் கோவை, சிறுவாணி சாலை, ஆலாந்துறை அருகே உள்ள ஹைஸ்கூல் புதூர் பகுதியில் பலம் இழந்த, பழமை வாய்ந்த வாகை மரம் ஒன்று கடந்த சில நாட்களாக வேகமாக அசைந்து ஆடிக் கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று வீசிய சூறைக்காற்று காரணமாக அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதன் அருகே இருந்த சைக்கிள் பழுது நீக்கும் கடை மீது விழுந்து சேதம் அடைந்தது. மரம் விழும் பொழுது ஆலாந்துறை இருந்து கோவை நோக்கி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர், மரமானது அவரது முன்னாள் விழுந்தது, சில நொடிகளுக்கு முன் சற்று முன்னர் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

எனவே, மரங்களை பாதுகாப்பாக வைத்து இருக்கவும், சேதமடைந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாளை முதல் ஆடி தொடங்குவதால் மேலும் ஆட்டம் காணும் மரங்கள் சாய்ந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் முன்பு பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.