கேரள மாநிலம் பம்பையில் இருந்து நிலகல்லுக்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரை மீது
விழுந்தது. கேரளம் மாநிலத்தின் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது.
பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்து பம்பையில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்து மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, மாற்றுப் பேருந்து மூலம் பக்தர்களை அனுப்பி வைத்தனர்.