
மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது.
இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர்கள் கடந்த 1990 முதல் சென்னை கோவிலம்பாக்கம் முகாமில் வசித்து வருகின்றனர். சமூக ஆர்வலரான இவர் மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சைக்கிள் பயணம் தொடங்கினார். காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் திருப்பூர் கோவை திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு வந்தார் .
காந்தி மண்டபம் முன் இந்த சைக்கிள் பயணத்தை சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மற்றும் இலியாஸ், சிவா ஆகியோர் வரவேற்றனர்.
