• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சங்காலத்திலேயே செஸ் விளையாடிய தமிழன்

ByA.Tamilselvan

Jul 28, 2022

தமிழர்கள் சங்ககாலத்திலேய செஸ் விளையாட்டை ஒரு போர் உத்தியாக விளையாட துவங்கியுள்ளனர்.
சதுர்+ அங்கம்=சதுரங்கம் 4 பக்கங்களை கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இது போர் விளையாட்டாகும்.:”வல் என்கிளவிதொழில்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல் சதுரங்கத்தின் சங்ககாலப் பெயர் . மேலும் “கவை மனத்து இருந்தும் வல்லு வனப்பு அழிய” என்ற அகநானுற்றின் வரிகள் மற்றும் கலித்தொகையில் வரும் “வல்லுப்பலகை ” உள்ளிட்டவை இவ்விளையாட்டை தமிழர்கள் அன்றே விளையாடியுள்ளனர் என்பதை உண்ர்த்துகின்றன.
மேலும் போருக்குசெல்வதற்கு முன் பெரிய சதுரங்க பலகைகளில் போருக்கான திட்டமிடுவதற்காக ஏற்படுத்தபட்ட உத்தி தான் பிற்காலத்தில் அதுவே விளையாட்டாக மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வல்லுப்பலகை தற்போது சதுரங்கம் பலகையாகமாறிவிட்டது. எனவே சங்ககால தமிழனும் செஸ்விளையாடி உள்ளான் என்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை