• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஓர் இனிப்பான செய்தி..!

Byவிஷா

Jul 3, 2022

சுமார் 8000க்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய செயலகம் சார்ந்த நிர்வாகப் பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய செயலக சேவை (CSS), மத்திய செயலக ஸ்டெனோகிராபர் சேவை(CSSS), மத்திய செயலக கிளெரிக்கல் சேவை(CSCS) ஆகிய பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சரியாக 8089 மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் CSS பிரிவை சேர்ந்த 4,734 ஊழியர்களுக்கு, CSSS பிரிவை சேர்ந்த 2966 ஊழியர்களுக்கும், CSCS பிரிவை சேர்ந்த 389 ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஜித்தேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற பல்வேறு உயர் நிலை கூட்டங்களுக்கு பிறகே 8000 மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடமும் முன்கூட்டியே ஆலோசனை கேட்கப்பட்ட பின் முடிவெடுக்கப்பட்டுள்ளது.