உசிலம்பட்டியில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.
மநுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய கோட்ட அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு கோட்ட செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கேங்மேன் பணியாளர்களுக்கு பாதுகாப்பு குறித்தும் ஏற்கனவே ஏற்பட்ட மின் விபத்து பற்றிய நேரடி ஆய்வு விபரம் மற்றும் மீண்டும் மின் விபத்து நடப்பதை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பயன்படுத்தும் முறை,பாதுகாப்பு மொபைல் செயலி பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவாக எளிய முறையில் தெரிவிக்கப்பட்டது.
இதில் கேங்மேன் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.