• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீசோப் நிறுவனத்தில் புடவை அடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் உஷா என்பவர் meeshop என்ற செயலியின் மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சில்க் சாரி புடவை ஒன்று ஜனவரி ஏழாம் தேதி அடர் செய்திருந்தார் ஜனவரி 11ஆம் தேதி அன்று அவருக்கான புடவை டெலிவரி செய்யப்பட்டது டெலிவரி செய்யப்பட்ட புடவையானது கிழிந்து தரம் இல்லாமல் இருந்ததால் வேறு புடவை வேண்டி 12ஆம் தேதி ரிட்டன் மூலம் அனுப்பி இருந்தார் மீண்டும் 10 நாட்கள் கழிந்து 21 ஜனவரி அன்று கிழிந்த தரம் இல்லாத புடவைக்கு பதில் வேறு புடவை அனுப்பி இருந்தார்கள் அதை உஷா ஆர்வத்தோடு தனது தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து தமக்கு வந்துள்ள கவரை திறந்து உள்ளார்.

திறந்த போது துண்டு துண்டாக கிழிக்கப்பட்டிருந்த துணிகளை கவருக்குள் அடைத்து அனுப்பி வைத்திருந்தனர் அதிர்ச்சியால் செய்வதறியாது டெலிவரி செய்யப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார் அவர் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது வேண்டுமென்றால் மீண்டும் நீங்கள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லி தொலைபேசி அணைத்துக் கொண்டார் மீசோ நிறுவனத்திடம் உஷா மீண்டும் புகார் அளித்துள்ளார் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து இதே போன்ற சம்பவம் நடைபெற்று வருவதால் செயலிகள் App மூலமாக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்