ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டி தமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்கிறது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம்.

உலகில் இன்று வாழும் மொழிகளில் முதல் மொழியான தமிழின் நீட்சியை,தொடர்ச்சியைஉறுதி செய்வதற்காக முடிந்தவரை பேசும் போது தமிழில் பேசலாம், தமிழில் கையெழுத்திடலாம், விண்ணப்பங்களையும் முறைப்பாடுகளையும் தமிழில் நிரப்பலாம், அஞ்சல் மற்றும் தூதஞ்சல் அனுப்பும் போது தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பலாம், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த உலக சாதனை நிகழ்வின் நோக்கமாகும் என்று மாணவியைப் பயிற்றுவித்த கோவை மவுண்ட் கார்மல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர்கள் சுகிர்தா மற்றும் வனிதா போன்றோர். உலக சாதனையை கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் குறிப்பிடுகையில் வணிகவியலுக்குத் தேவையான அனைத்து மொழிகளையுமே கற்று புலமையோடிருப்போம். ஆனால் அடிப்படை வாழ்வியல் பயன்பாட்டில் தமிழ் மொழிக் கே முன்னுரிமையளிப்போம் என்றார்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் நினைவு கேடயம் தங்கப்பதக்கம் அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை நடுவர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியின் மொழித் திறனைப் பாராட்டி சோழன் மழலை மொழி வித்தகர் என்ற பட்டமும் சோழன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், கோவை மாவட்டத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெருமாள் நீலமேகம், லலிதா போன்றோர் பங்கு கொண்ட அதேவேளை கோவை மவுண்ட் கார்மல் நர்சரி அன்ட் ப்ரைமரி பள்ளியின் தாளாளர்கள் வனிதா மற்றும் சுகிர்தா ரொசலின்ட் போன்றோர் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை பள்ளியின் ஆசிரியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்






