• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பட்டு வேஷ்டி, சர்ட்டுக்கென தனி ஷோரூம்.. ராம்ராஜ் அசத்தல்!

Byகாயத்ரி

Sep 13, 2022

ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள் மற்றும் காட்டன் சர்ட்டுகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணம் செய்யப்போகும் மணமகன்களுக்கு ஏற்ற வகையில் லக்னா என்ற பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டைகளுக்கான புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஷோரூமை சென்னை துணை மேயர் மகேஷ் குமார் திறந்து வைத்துள்ளார். மணப்பெண்களுக்கு விதவிதமான பட்டு வகைகள் பல கடைகளில் ஏராளமாக கிடைக்கின்றது. ஆனால் மணமகன்களுக்கு பட்டு வேட்டிகள் குறைந்த இடங்களிலேயே கிடைக்கிறது. எனவே தான் இந்த மணமகன்களுக்கு என பிரத்தியேகமாக பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சட்டைகள் ஷோரூம் திறந்துள்ளோம் என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஷோரூமில் ஒரு லட்ச ரூபாயில் பட்டு வேட்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.