• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இரும்பாடியில் கிராமத்தினர் அமைத்த தடுப்பு வேலிகளைதவெக நிர்வாகிகள் உடைத்ததாக பரபரப்பு புகார்

ByKalamegam Viswanathan

Sep 8, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வைகை ஆற்றில் இரும்பாடி கருப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவிழா காலங்களில் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் புனித நீர் எடுத்து செல்வதற்கும் வைகை ஆற்றை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வைகாற்றின் கரையில் உள்ள மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் இறந்தவர்களின் அஸ்தியை வைகை ஆற்றில் கரைத்து விட்டு செல்வதாகவும் ஆகையால் தங்களின் புனிதம் கெடுவதாக கருதிய கிராம பொதுமக்கள் வைகை ஆற்றின் அருகில் மயானத்தில் இரும்பு கம்பி வேலி போட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் கருப்பட்டி இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து கிராமத்தினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை உடைத்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து இரும்பாடி கிராமத்தில் கூடிய கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை கண்டித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வெளியூரை சேர்ந்த தவெக நிர்வாகிகள் எப்படி தங்கள் ஊருக்கு வந்து தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தலாம் இதனை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து இரும்பாடி கிராமத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரும்பு வேலிகளை உடைத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு ஒருவித பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது இந்த நிலையில் கிராமத்தின் சார்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியதவெக நிர்வாகிகளை கண்டித்தும் முறைப்படி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்றும் முடிவு செய்தனர். ஏற்கனவே தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இதுபோன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் சோழவந்தான் அருகே கிராமத்தினர் ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்பு வேலிகளை தவெக நிர்வாகிகள் உடைத்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.