• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவனின் கை விரல்கள் துண்டான சம்பவம்..!

ByP.Thangapandi

Nov 7, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரபு – நதியா தம்பதி., இந்த தம்பதியின் 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.,

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு சத்யா நகரில் உள்ள பட்டாசு கடையில் பட்டாசு வாங்கிய இந்த பள்ளி மாணவன் பட்டாசு வெடிக்கிறதா என சோதனை செய்வதற்காக ஒரு பட்டாசை வெடிக்க செய்த போது எதிர்பாரத விதமாக கையில் இருந்தவாரே பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது, இதில் சிறுவனின் வலது கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகி பலத்த காயம் ஏற்பட்டது.,

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சூழலில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.