
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, பேரையம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

அம்மா இருந்த போது விளையாட்டு துறைக்கு பொற்காலமாக இருந்தது, ஆனால் இன்று கிராமத்திலேயே போதை பொருள் நுழைந்துவிட்டது.
போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு சீரழிவு, முன்பெல்லாம் காவல்துறை நம்மை காப்பாற்றும் என காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம், இப்போ காவல் நிலையம், கொலை நிலையமா மாறி போய்விட்டது.
விசாரணைக்கு சென்ற அஜித்குமார் உள்பட 25 உயிர் பறிக்கப்பட்டுள்ளது., நீதியரசர்கள் சொல்வதை போல அரசே கொலை செய்துள்ளது.

பாலாறும் தேன் ஆறும் ஓடும் என சொன்னார்கள், தமிழ்நாட்டில் தற்போது ரத்த ஆறு தான் ஓடுகிறது., திமுக ஸ்டாலின் அரசில் படிந்திருக்கும் இந்த ரத்த கரையை ஸ்டாலின் திமுக அரசுக்கு முற்றுபுள்ளி, முடிவுரை எழுதினால் தான் இந்த ரத்த கரை துடைக்கப்படும்.
ஏனென்றால் கேள்வி கேட்க யாரும் இல்லை என நினைக்கிறார்கள், அஜித்குமார் என்ற இளைஞர் மீது புகார் கொடுத்தவரே ஒரு ப்ராடு, ப்ராடு கம்பெனி அது குறித்து டிவியில் பார்த்திருப்பீர்கள்., ஒரு ப்ராடு கம்பெனி கொடுத்த புகாரை வைத்து கொண்டு பல்லை இழித்துக் கொண்டு, கோவிலாக இருப்பதால் வாய்ல வர மாட்டுது, இல்லையென்றால் கொச்சை கொச்சையாக வரும்.
இளைய சமுதாயமே நீங்கள் விளையாட வேண்டும், அதே நேரத்தில் கவணமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
கட்சிக்கார்களிடம் உறுப்பினர் சேர்க்க சொல்கிறார், அதற்கு வீடியோ காலில் பேசி விளம்பர படுத்துகிறார், விளம்பர அரசு இன்று இருக்கும் சூழலாக இருக்கிறது.
இளைஞர்கள் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
