• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கை

ByA.Tamilselvan

Mar 29, 2023

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என பாமக தலைவர் ராமதாஸ் நிலைபாட்டை தவிக்க வேண்டும் வணிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை ராமதாஸ் தவிர்க்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒரு மாத கால அவகாசம் என்பது போதாது. எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார் விக்கிரமராஜா.