மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார். மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பசுமை திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் மூலமாக கண்மாய், குளங்கள், சாலை ஓரம் மற்றும் அனைத்து வாடுகளி லும் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், அங்கன் வாடி மையம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மல்லாங்கினர் பேரூராட்சி யில் பசுமை திட்டம் மற்றும் தூய்மை கிராமம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்க விழா வளமீட்பு மையத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலர் அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அன்பழகன் கூறிய போது..,
தமிழக அரசின் பசுமை திட்டத்தின் மூலமாக அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் அமைப்பு மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என்று செயல் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.
