தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம்06- பயனாளிகளுக்கு தலா ரூ. 13, 500ம் வீதம் 4-பயனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகளையும், 1 பயனாளிக்கு சக்கர நாற்காலியினையும், 1 பயனாளிக்கு காதொலி கருவியினையும் என மொத்தம் ரூ. 81. 000ம் மதிப் பில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் ரூ. 16, 437ம் மதிப்பில் 03 பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங் களையும், மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச் சந்திரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) ராஜேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராய ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.