மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளான தேனி சாலை, மதுரை சாலை, வத்தலக்குண்டு சாலை,பேரையூர் சாலை மற்றும் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவினர் சார்பில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.,

இதில் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணாச்சி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.,
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்துள்ள சூழலில் மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை செய்யப்படும் என அறிவித்து இதுவரை வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்பட்ட நிலையில்,

இந்த போஸ்டரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, செங்கோட்டையன், வைத்தியலிங்கம், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர்களின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








