• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பேரையூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது..!

ByP.Thangapandi

Nov 9, 2023

பேரையூரில் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து – 28 1ஃ2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவரது பூட்டியிருந்த வீட்டில் கடந்த மாதம் 16ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த ( 20 1ஃ2 ) இருபதரை பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக பேரையூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி இலக்கியா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை செய்த போது ருக்மணி வீட்டில் நகையை கொள்ளையடித்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் பேரையூர், டி.கல்லுப்பட்டி, சித்திரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது., இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கண்ணனைக் கைது செய்த போலிசார் அவரிடமிருந்து ( 28 1ஃ2 ) இருபத்தி எட்டரை பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்குட்பட்ட அனைத்து பகுதியிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக டிஎஸ்பி இலக்கியா தெரிவித்துள்ளார்.,

பேட்டி : இலக்கியா ( பேரையூர் டிஎஸ்பி )