• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

கோவை தொப்பம்பட்டியில் நள்ளிரவில் பேன்சி கடையில் தீ விபத்து

BySeenu

Feb 13, 2024

கோவை தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேன்சி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அதன் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென பேன்சியில் தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அக்கம் பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறைவிற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.