தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு புதிய உயிர் – எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் வடிவமாகவே குடும்பத்தில் வரவேற்கப்படுகிறது. ஆனால், சில குழந்தைகள் பிறக்கும் முன்னரே அல்லது பிறந்தவுடன் வாழ்க்கையை தொடமுடியாத கடுமையான மருத்துவ சூழ்நிலையில் இருப்பதுண்டு.

இந்நிலையில், அந்தக் குழந்தைக்கும், அவர்களது பெற்றோருக்கும் சாந்தியும், ஆதரவும் வழங்கும் மருத்துவ அணுகுமுறையாக “பெரினாடல் நலிவுப் பராமரிப்பு” சிகிச்சை முறை வளர்ந்து வருகிறது என்று குழந்தை நல மருத்துவரும், தரமணி வி.எச்.எஸ் மருத்துவ நிறுவனத்தின் குழந்தை நல துறைத் தலைவரும் ஆகிய டாக்டர் தம்பரசி தளவாய் சுந்தரம் கூறினார்.
இந்திய குழந்தை நலக்கல்வி அமைப்பும் மற்றும் தமிழக கிளையும் இணைந்து குழந்தை நல மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கினை கன்னியாகுமரியில் நடத்தியது. கன்னியாகுமரியை அடுத்த பால் குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 45 வயதிற்குட்பட்ட இளம் மருத்துவ அறிஞர்கள் இந்த பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் டாக்டர் தம்பரசி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது,
இந்த சிகிச்சை என்பது, கர்ப்பகாலத்திலேயே பிணிநிலை கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு. இந்தக் குழந்தைகள் வாழவே முடியாத நிலையில் இருந்தால், தேவையற்ற சிகிச்சைகள் அல்லாது, வலியற்ற, அமைதியான இறுதி நாட்களை வழங்குவதே இதன் நோக்கம்.
“வாழ்க்கையை நீட்டிக்க முடியாவிட்டாலும், மரியாதையுடன் வாழவைக்கும் மருத்துவம் இது,” என்கிறார் மூளை வளர்ச்சி இல்லாத நிலை, கடுமையான மரபணு குறைபாடுகள், கூச்சு சுவாசக் குறைபாடுகள், கருப்பையில் குழந்தை உயிரிழக்கும் நிலை, மிக குறைவான வாழ்நாள் வாய்ப்பு உள்ள பிறவியிலுள்ள வியாதிகள்.
இந்த சிகிச்சை முறை அதிக வலியளிக்கும் சோதனைகள், தேவையற்ற உபகரணங்களை தவிர்த்து, குழந்தை இயல்பாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறார்கள். பெற்றோருக்கான ஆதரவு மருத்துவ முடிவெடுக்க ஆலோசனை துக்கம் எதிர்கொள்வதற்கான உளவியல் ஆதரவு, ஆன்மீக வழிகாட்டல், நினைவெச்சங்கள் குழந்தையின் கை/கால் ரேகை, புகைப்படம், நினைவுப் பெட்டி, இறுதிக்கணங்களில் பெற்றோர்கள் குழந்தையை கட்டிக்கொள்ளும் உரிமை.
நாங்கள் சிகிச்சையை நிறுத்தவில்லை, மாறாக அதை மாற்றுகிறோம் – வலியை குறைத்து, அன்பை அதிகரிக்கிறோம்,” என உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளில் தெரிவித்தார் அவர்.

தாயும் தந்தையும் ஒரு உயிரை இழக்க நேரிடும் வேளையில், அவர்கள் முழுமையான ஆதரவும், அரவணைப்பும் பெற வேண்டியது அவசியம். பெரினாடல் நலிவுப் பராமரிப்பு என்பது மருத்துவத்தின் மனிதநேயம் சார்ந்த முகம்தான். இது ஒரு குழந்தையின் கடைசி நேரங்களை மரியாதையுடன் நிறைவு செய்ய, பெற்றோருக்குத் தவிர்க்க முடியாத மனதளவிலான ஒத்துழைப்பை வழங்குகிறது. என்றார் அவர்.
முன்னதாக அமைப்பின் தலைவர் டாக்டர் சந்தோஷ்,துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தி கால்கலி, செயலாளர் யோகேஷ் என் பாதுகாப்பு, பொருளாளர் அதனு பத்ரா, அமைப்பு தலைவர் டாக்டர் கே தாணப்பன், மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.