

இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை அதிசயத்திலும் ஆச்சரியத்திலும் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறார். இதை பார்த்த அனைவரின் முகத்திலும் நெகிழ்ச்சியும், பொன் சிரிப்பும் வரவழைத்துள்ளது.

