• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வனப்பகுதிக்குள் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..,

BySeenu

Mar 25, 2026

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஆனைக்கட்டியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது தந்தை மயிலன் (56). இவர் மணிகண்டனை பார்க்க கடந்த 15ம் தேதி வந்துள்ளார் அதன் பின் காணாமல் போயுள்ளார்.

மயிலன் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்பதால், அவர் வழக்கம்போல எங்காவது சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் கருதியுள்ளனர். திரும்ப வீடு வராததால் தடாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ம் தேதி அன்று ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் அவ்வழியாக ரோந்து சென்ற வனக்காப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சந்திரன் ஆகியோர்கள் பார்த்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அழுகிய நிலையில் இருந்த ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த மணிகண்டன், சடலத்தின் சட்டையை வைத்து அது தனது தந்தை மயிலன் தான் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் காட்டுப் பாதை வழியாகச் சென்றபோது காட்டுயானை தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.