கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.காலையில் பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்து பார்த்து தான் தெரிகிறது.நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட உள்ளது.உயிரிழந்த நபர் ராஜன் (60)பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளபடும்.
பணியில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்தி,கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.காவல் நிலையத்தில நடைபெற்ற தற்கொலை தான் இது.லாக்கப் டெத் கிடையாது என தெரிவித்தார்.